#Breaking : 4-வது முறையாக புதுச்சேரி முதல்வரானார் என்.ஆர்.ரங்கசாமி…!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக என்.ஆர்.ரங்கசாமி அவர்கள் பதவியேற்றுக் கொண்டார்.
புதுச்சேரியில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், மே 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநிலத்தில் மொத்தம் 30 தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இந்த நிலையில், என்.ஆர்.காங்கிரஸ்-இன் சட்டப்பேரவைக் குழு தலைவராக என்.ரங்கசாமி அவர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து, மே 3-ஆம் தேதி என்.ஆர்.ரங்கசாமி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி எம்எல்ஏக்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்கள்.
இதனையடுத்து, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதலமைச்சராக என்.ஆர்.ரங்கசாமி அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அவர்கள், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். என்.ஆர்.ரங்கசாமி அவர்கள் 4-வது முறையாக புதுச்சேரி முதல்வராக பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.