#Breaking:முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு; இந்திய நிபுணர்கள் மீது நம்பிக்கை இல்லையா?- உச்சநீதிமன்றம் கேள்வி…!
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் இந்திய நிபுணர்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சர்வதேச நிபுணர்களைக் கொண்டு முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு பற்றி ஆய்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில்,இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில்,முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு விவகாரத்தில் இந்திய நிபுணர்கள் மீது நம்பிக்கை இல்லையா? என்று மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.சர்வதேச நிபுணர்களுக்கு இணையாக இந்திய நிபுணர்களும் அறிவார்ந்தவர்களே என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
இதனையடுத்து,முல்லை பெரியாறு அணையின் செயல்பாடுகள், பாதுகாப்பு குறித்து விரிவான அறிக்கையை வருகின்ற 26 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய கண்காணிப்பு நிபுணர் குழுவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது.