சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் உடல் அரசு மரியாதையுடன் தகனம்.
அரசு மரியாதையுடன் உத்தரப் பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் தகனம் செய்யப்பட்டது. உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாயம் சிங் யாதவ் (82) உடல்நிலை குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலமானார். மறைந்த முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவின் பிறந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் சைபாய் எனும் கிராமத்தில் இன்று மாலை 3 மணிக்கு இறுதி அஞ்சலி நடைபெற்றது.
இந்த நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் சைபாய் கிராமத்தில் சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவ் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், திமுக சார்பில் டிஆர் பாலு, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…