#Breaking: அமளியை தொடர்ந்தால் எம்பிக்கள் சஸ்பெண்ட் – அவைத் தலைவர் எச்சரிக்கை!!
அமளியை தொடர்ந்தால் எம்பிக்கள் சஸ்பெண்ட் செயயப்படுவார்கள் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற மாநிலங்களவையில் அமளியை தொடரும் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று அவைத் தலைவர் வெங்கையா நாயுடு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், மாநிலங்களவையை முடக்கும் எம்பிக்களின் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஆரம்பித்தது முதல், பெகாசஸ், வேளாண் சட்டம், விலை உயர்வு, விவசாயிகள் போராட்டம் என பல்வேறு விவகாரங்களை குறித்து விவாதிக்க வேண்டும் என முழக்கமிட்ட, எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளில் ஈடுபட்டு வருவதால் இரு அவைகளும் முடக்கப்பட்டு வருகிறது.
அவையில் அத்துமீறலை கண்டித்து ஏற்கனவே அவைத்தலைவர் எச்சரிக்கை விடுத்த நிலையில், தொடர்ந்து எதிரிக்கட்சியினர் பல்வேறு விவாதங்கள் குறித்து கேள்வி எழுப்பி அவை தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு வருகின்றனர்.
இதனிடையே, சில தினங்களுக்கு முன்பு பெகாசஸ் குறித்த அறிக்கையை மத்திய அமைச்சர் தாக்கல் செய்த போது, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி ஒருவர், அதனை பிடிங்கி அவை தலைவர் இருக்கையை நோக்கி எறிந்தார். இதற்கு அவை தலைவர் எச்சரிக்கை தெரிவித்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், இன்று மாநிலங்களவையில் பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து விசாரிக்கக்கோரி எதிரிக்கட்சி எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால், மாநிலங்களவை 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும், அமளியில் ஈடுபடும் எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.