BREAKING: நாடு முழுவதும் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு.!
நாடு முழுவதும் முழுஅடைப்பு மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் 25,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 -ன் கீழ் மேலும் இரண்டு வருடங்கள் நீட்டிப்பு என மத்திய உள்துறை தெரிவித்துள்ளது. மே4-ம் தேதியில் இருந்து மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது (மே 17ஆம் தேதிவரை ) ஊரடங்கு நீட்டிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சிவப்பு, பச்சை, ஆரஞ்சு என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப நெறிமுறைகள் அமல்படுத்தப்படும்.
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள சிவப்பு மண்டல பகுதிகளில் தளர்வுகள் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவப்பு மண்டலத்தில் சைக்கிள், ரிக்ஷா ,ஆட்டோ, கார் இயக்க தடை என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பச்சை, ஆரஞ்சு பகுதிகளுக்கு அதிகளவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பச்சை மண்டலங்களில் குறைந்த அளவில் பேருந்து சேவை இயக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பச்சை மண்டலங்களில் 50% பயணிகளுடன் 50% பேருந்துங்களை இயக்க அனுமதி என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு சற்று குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலங்களில் ஒரு பயணியுடன் காரை இயக்கலாம் . மாவட்டங்களுக்கு இடையே அனுமதி பெற்று மக்கள் வாகனங்களில் செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
#BreakingNews : நாடு முழுவதும் மேலும் 2 வாரம் ஊரடங்கு நீட்டிப்பு.!#CoronaUpdates #coronavirusinindia #LockdownExtended #Lockdown3 pic.twitter.com/iLEEmbZPFH
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 1, 2020