#Breaking:எம்.எல்.ஏ. ஆக பதவியேற்ற மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி…!
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமீருல் இஸ்லாம் மற்றும் ஜாகிர் ஹொசைன் ஆகியோர் தற்போது எம்எல்ஏவாக பதவியேற்றனர்.
முன்னதாக நடைபெற்ற மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.ஆனால்,நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானா்ஜி தோல்வியுற்றாா்.இருப்பினும், மேற்கு வங்க முதல்வராக அவா் பதவியேற்றாா்.இதனால்,பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவா் எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட வேண்டும்.
இதற்கிடையில்,பவானிபூர் தொகுதி திரிணாமுல் எம்.எல்.ஏ., சோபன்தே தனது பதவியை ராஜினாமா செய்தார்.இதனையடுத்து,பவானிபூர் தொகுதிக்கு இடைதேர்தல் அறிவிக்கப்பட்டு,அத்தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்டாா்.அவரை எதிா்த்து பாஜக சாா்பில் பிரியங்கா டிப்ரிவால் வேட்பாளராக களம் இறங்கினார்.
இதனையடுத்து,கடந்த செப்.30 ஆம் தேதி நடைபெற்ற பவானிபூர் இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இரண்டு நாட்களுக்கு முன்னதாக எண்ணப்பட்ட நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 84,709 வாக்குகளும்,அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பிரியங்கா திப்ரேவால் 26320 வாக்குகளும் பெற்றனர்.இதனால்,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி,தன்னை எதித்து போட்டியிட்ட பிரியங்கா திப்ரேவாலை விட 58,832 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.இதனால்,அவரது முதல்வர் பதவியை மேலும்,நான்கரை ஆண்டுகள் தொடருவார். இதற்கிடையில்,ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய இடங்களிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில்,இன்று மேற்கு வங்க சட்டசபையில் மேற்குவங்க ஆளுநர் ஜக்தீப் தங்கர், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பவானிபூர்,ஷம்ஷெர்கஞ்ச் மற்றும் ஜாங்கிபூர் ஆகிய தொகுதிகளுக்கான மூன்று எம்எல்ஏ -க்களுக்கு, பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.அதன்படி,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அமீருல் இஸ்லாம் மற்றும் ஜாகிர் ஹொசைன் ஆகியோர் எம்எல்ஏவாக பதவியேற்றனர்.
Kolkata: Chief Minister Mamata Banerjee, Amirul Islam, and Jakir Hossain take oath as three newly elected MLAs, in the presence of West Bengal Governor Jagdeep Dhankhar pic.twitter.com/a2BP6FHUB1
— ANI (@ANI) October 7, 2021