#breaking: அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா!!

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2வது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்படவுள்ளது. அதற்கான 43 புதிய மத்திய அமைச்சர்களின் பட்டியல் சற்று முன் வெளியிடப்பட்டது.
43 புதிய மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவானது இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள நிலையில், அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், தாவர்சந்த் கெலாட், தபஸ்ரீ சவுத்ரி, சதானந்தா கவுடா, ஹர்ஷவர்தன் உள்ளிட்ட பலரும் தங்களது பதவியை தொடர்ந்து ராஜினாமா செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ராஜினாமா செய்துள்ளனர். பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ள நிலையில், இதுவரை 12 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025