காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயன்று வரும் நிலையில்,இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றும்,மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடிக்கு அண்மையில் முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
இதனைத் தொடர்ந்து,தஞ்சை கல்லணையில் ஆய்வு செய்த பின்னர் காவிரி மேலாண்மை ஆணையத்தின் குழு தலைவர் ஹல்தர் செய்தியாளர்களிடம் கூறுகையில்:”மேகதாது உள்ளிட்ட அணை விவகாரங்கள் குறித்து விவாதிக்க காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு முழு அதிகாரம் இருக்கிறது.வருகின்றன காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில், அனைத்து விவகாரங்களுக்கு விவாதிக்கப்படும்.மேலும்,காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு. நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை,யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்பின்னர்,ஜூன் 23-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் ஜூலை 6 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,மேகதாதுவில் அணை கட்ட சுற்றுச்சூழல் அனுமதி கோரிய கர்நாடக அரசின் விண்ணப்பம் பரிசீலனையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மேகதாது அணை கட்டுமானம் தொடர்பான விரிவான அறிக்கையை மத்திய நீர்வளத்துறை அமைச்சகமும்,காவிரி ஆணையமும் இறுதி செய்ய வேண்டும் என்றும் மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக,விரிவான அறிக்கையை இறுதி செய்தால் மட்டுமே அணை கட்டுவதன் அனுமதிக்கான ஆய்வு எல்லைகளை வழங்க முடியும் எனவும் மத்திய சுற்றுச்சூழல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே,மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் அனைத்துக் கட்சி குழுவானது நேற்று இரவு டெல்லி சென்ற நிலையில்,அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழுவானது இன்று மதியம் 1 மணியளவில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்தை இன்று சந்திக்கவுள்ளனர்.அப்போது,மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் தவெக கூட்டணி என பரவி வந்த செய்தியை அக்கட்சியின் பொதுச் செயலாளர்…
தார்பூரி : குஜராத் பதான் மாவட்டம் தார்பூரில் அமைந்துள்ள ஜி.எம்.இ.ஆர்.எஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சுரேந்திரநகரைச் சேர்ந்த அனில்…
சென்னை : நயன்தாராவின் புதிய படமான 'ராக்காயி' டைட்டில் டீசர் வெளியானது. முன்னதாக, சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று நயன்தாரா: beyond…
சென்னை : லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இன்று தனது 40-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கேரளாவில் மரியம் டயானாவாக பிறந்து,…
கொழும்பு : சமீபத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலைத் தொடர்ந்து இலங்கை நாடாளுமன்றத்திற்காக நடந்த தேர்தலிலும் அதிபர் அநுர குமரா திசநாயக…
சென்னை : தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 18.8 செ.மீ மழையும், கோடியக்கரையில்…