#BREAKING: மேகதாது அணை பற்றி விவாதிக்கக்கூடாது – உச்சநீதிமன்றம்

Published by
பாலா கலியமூர்த்தி

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க தடை என உச்சநீதிமன்றம் அறிவிப்பு.

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்க எதிர்ப்பு தெரிவிக்கும் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது. ஆணைய கூட்டம் 22-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில், தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. அப்போது, மேகதாது அணை பற்றி கூட்டத்தில் விவாதிக்க ஆணையம் ஒப்புக்கொண்டதை எதிர்த்து தமிழ்நாடு, கர்நாடக அரசு காரசார விவாதத்தை முன்வைத்தனர்.

தமிழக அரசின் வாதம், உச்சநீதிமன்றம் உத்தரவின்படி நீர் பங்கீடு முறையாக மேற்கொள்ளவில்லை. மேகதாது அணை தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது. தமிழகத்திற்கு முறையாக நீர் பங்கீடு அளிக்கப்படுவதாக கர்நாடக அரசு சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் கருத்தை பற்றி அறிய விரும்புகிறோம் என்றும் மேகதாது அணை குறித்து விவாதிக்கலாமா? கூடாதா? என்பது பற்றி காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை பற்றி விவாதிக்கக்கூடாது என தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆணையத்துக்கு உத்தரவிட்டனர். 2018ம் ஆண்டிலிருந்து மேகதாது அணை பிரச்சனை இருக்கிறது, ஒருவாரம் ஒத்திவைத்தால் ஒன்றும் ஆகாது என்றும் மேகதாது பற்றி விவாதிக்கலாமா என காவிரி ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் எனவும் கூறிய நீதிபதிகள் வழக்கு விசாரணையை செவ்வாய்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நடத்த தடையில்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து விவாதிக்கக்கூடாது என தமிழ்நாடு அரசு கோரியிருந்தது,.  எனவே, மேகதாது அணை குறித்து ஆணைய கூட்டத்தில் விவாதிக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துளைத்து. மேகதாது பற்றி விவாதிக்க தடைகோரிய தமிழக அரசின் மனுவுக்கு பதில் அளிக்க காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, மேகதாது குறித்து விவாதிக்க ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது என்று அதன் தலைவர் பேசியதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.! 

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

3 mins ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

36 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

49 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

2 hours ago