தமிழக அரசின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்டப்பேரவை தீர்மானத்திற்கு எதிராக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.
எது நடந்தாலும் மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என கர்நாடக உறுதியாக உள்ளது. அதேபோல மேகதாதுவில் அணை கட்டவிடாமல் எப்படியும் தடுப்போம் என தமிழக அரசும் உறுதியாக இருக்கிறது. இந்த சமயத்தில், மேகதாது அணைக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கர்நாடக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
காவிரியில் உள்ள உபரி நீரை பயன்படுத்த கர்நாடகாவிற்கு உரிமை இருப்பதாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனிடையே, கர்நாடக மாநிலம் கனகபுரா அருகே மேகதாது என்ற இடத்தில் காவிரியின் குறுக்கே புதியதாக அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த மேகதாது அணை ரூ.9 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி…
மாஸ்கோ : ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் நாளுக்கு நாள் நீடித்துக் கொண்டே வருகிறது. சமீபத்தில், உக்ரைன் அதிபர்…
வயநாடு : கேரளா மாநிலம் வயநாடு மக்களவை தொகுதிக்கான இடைதேர்தல் கடந்த நவம்பர் 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில்…
சென்னை : நடைபெற்ற மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநிலங்களின் சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
மும்பை : இன்று மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது என்றாலும், பலரது கண்களும்…