பாஜக கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு மாயாவதி ஆதரவு என அறிவிப்பு.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், அதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில், குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. யஷ்வந்த் சின்ஹா ஜூன் 27-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக ஜார்க்கண்ட் முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு (64) அறிவிக்கப்பட்டிருந்தார்.
குடியரசுத் தலைவர் வேட்பாளராக பழங்குடியினப் பெண் ஒருவர் அறிவிக்கப்பட்டுள்ளதற்கு பாஜக ஆதரவுக் கட்சிகள் வரவேற்பு அளித்தன. இதன்பின் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பிரதமர் மோடி, தேசிய தலைவர் ஜெபி நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ள திரௌபதி முர்மு, தனக்கு ஆதரவுகளை திரட்டி வருகிறார்.
இந்த நிலையில், பாஜக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளார். இது பாஜகவுக்கு ஆதரவாக எடுத்த முடிவு அல்ல, பகுஜன் சமாஜ் கட்சியின் கொள்கையை மனதில் வைத்து எடுத்த முடிவு என்று தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…