#BREAKING: முதுநிலை நீட்; சிறப்பு கலந்தாய்வு கோரும் மனு தள்ளுபடி!
சிறப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி மருத்துவர்கள் தொடர்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான சிறப்பு கலந்தாய்வு நடத்த கோரிய மனுக்களை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். காலியாக உள்ள 1,456 எம்.டி., எம்.எஸ்., இடங்களுக்கு சிறப்பு சலந்தாய்வு நடத்தக்கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில், மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு சிறப்பு கலந்தாய்வு நடத்தக் கோரும் வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, அனிருத்த போஸ் அடங்கிய அமர்வு உத்தரவிட்டது.
மருத்துவ கல்வியின் தரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என கூறி, சிறப்பு கலந்தாய்வு நடத்தக்கோரி மருத்துவர்கள் தொடர்ந்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 1,456 முதுநிலை மருத்துவ இடங்கள் காலியாக இருப்பது குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.