#BREAKING: மணிப்பூர் பெண் வன்கொடுமை – மேலும் ஒரு குற்றவாளி கைது..!
மணிப்பூரில் நிர்வாணமாக அழைத்து சென்று பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், மேலும் ஒரு குற்றவாளி கைது
மணிப்பூர் கலவரத்தின் போது நிர்வாணமாக அழைத்து சென்று பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும், முக்கிய நபர் இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில், அவரது பெயர் ஹுய்ரெம் ஹெரோதாஸ் மெய்தி என்றும் 32 வயது எனவும் மணிப்பூர் அரசு அவரது புகைப்படத்தை வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், மணிப்பூர் கலவரத்தின் போது நிர்வாணமாக அழைத்து சென்று பெண்களை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், மேலும் ஒரு குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ள நிலையில், இதற்கு அர்ஷியல் தலைவர்கள் முதல் பொதுமக்கள் வரை அனைவரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து, இந்த விவகாரத்தில் தொடர்ந்து அம்மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.