#BREAKING: திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக மாணிக் சஹா தேர்வு!

Published by
பாலா கலியமூர்த்தி

திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சரை மாணிக் சஹா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல்.

பாஜக ஆளும் மாநிலமான திரிபுரா முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார். தனது ராஜினாமா கடிதத்தை பிப்லப் குமார் தேப் அம்மாநில ஆளுநரிடம் அளித்திருந்தார். இவரது ராஜினாமா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் திரிபுராவின் புதிய முதலமைச்சர் தேர்தெடுப்பார்கள் என தகவல் கூறப்பட்டது.

பிப்லப் குமார் தேப் பல சர்ச்சைக்குரிய வகையில் செயல்பட்டதால் திரிபுரா மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அம்மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் பிப்லப் குமார் தேப் முதலமைச்சராக தொடர கூடாது என்ற கருத்தை தலைமைக்கு தெரிவித்ததை, தொடர்ந்து பிப்லப் குமார் தேப் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனால் திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வர் யார் என்று கேள்விகள் எழுப்பப்பட்டது. இந்த நிலையில், திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சரை மாணிக் சஹா தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, திரிபுரா மாநிலத்தின் புதிய முதல்வராக பாஜகவின் திரிபுரா தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான மாணிக் சாஹா மாணிக் சஹா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திரிபுராவில் 2021 நவம்பரில் நடைபெற்ற தேர்தலில் 13 உள்ளாட்சி அமைப்புகளிலும் பாஜகவின் வெற்றிக்கு மாணிக் சாஹா பெரும் பங்கு வகித்ததாக கூறப்படுகிறது.  பாஜகவின் திரிபுரா மாநிலத்தின் தலைவராக பிப்லப் குமார் தேப் பதவியேற்க வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

“பிரியங்கா அக்கா அந்த மாதிரி ஆள் கிடையாது”…ஆதரவாக குரல் கொடுத்த அமீர்!

சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…

15 mins ago

துலிப் டிராபி : வெகு நாட்களுக்கு பிறகு சதமடித்த சஞ்சு சாம்சன்! டெஸ்ட் போட்டி கனவு பலிக்குமா?

அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…

17 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்.. மீனாவுக்கு கெட்ட நேரமா?. ரோகிணி போடும் அடுத்த குண்டு..!

சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து  மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…

1 hour ago

“திருப்பதியில் ‘மகா பாவம்’ செய்துவிட்டனர்” குமுறும் முன்னாள் தலைமை அர்ச்சகர்.!

திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…

1 hour ago

ENGvsAUS : ‘டிராவிஸ் ஹெட்’ ருத்ரதாண்டவம்! 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!

நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…

2 hours ago

போரில் வெற்றி பெற்றாரா ஹிப்ஹாப் ஆதி? “கடைசி உலகப் போர்” டிவிட்டர் விமர்சனம் இதோ!

சென்னை : இசையமைப்பாளராக நம்மளுடைய மனதை கவர்ந்த ஹிப் ஹாப் ஆதி தன்னுடைய முதல் படமான மீசையை முறுக்கு படத்தின்…

2 hours ago