#Breaking: நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜி வெற்றி.!
நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியுடன் மாறி, மாறி முன்னிலையில் பெற்று வந்த நிலையில். மம்தா வெற்றி பெற்றுள்ளார்.
மேற்கு வங்க மாநிலத்தில் 292 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, மம்தா பானர்ஜி தலைமையில் ஆளும் கட்சியான திரிணாமூல் காங்கிரஸ் 216 இடங்களிலும், பாஜக 75 இடங்களிலும், சிபிஎம் கூட்டணி 0, மற்றவை 1 என முன்னிலை வகித்து வருகிறது. இது கிட்டத்தட்ட மம்தா பானர்ஜி மூன்றாவது முறையாக மேற்குவங்கத்தில் முதல்வர் ஆகிறது உறுதி செயய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
அதுமட்டுமல்லாமல் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியை விட ஆரம்பத்தில் பின்னடைவில் இருந்தார். மம்தா இதன்பின் 1,417 வாக்குகள் கூடுதலாக பெற்று முன்னிலை வகித்து வந்தார். இந்த நிலையில், மேற்குவங்கத்தின் நந்திகிராம் தொகுதியில் முதல்வவர் மம்தா பானர்ஜி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் சுவேந்து அதிகாரியுடன் மாறி, மாறி முன்னிலையில் பெற்று வந்த நிலையில் மம்தா வெற்றி பெற்றுள்ளார்.
இதில் சுவேந்து அதிகாரியைவிட 1,200 வாக்குகள் கூடுதலாக பெற்று மம்தா பானர்ஜி வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே, நந்திகிராம் தொகுதியில் 50000 வாக்குகள் வித்தியாசத்தில் மம்தா பானர்ஜியை தோற்கடிக்க வில்லை என்றால் அரசியலில் இருந்து விலகுகிறேன் என திரிணாமூல் காங்கிரசில் இருந்து விலகி பாஜக சார்பில் போட்டியிட்ட சுவேந்தி அதிகாரி சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.