#BREAKING: ராணுவத் தளவாட உற்பத்தியில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் – நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
ராணுவத் தளவாட உற்பத்தியில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
இன்று டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது கனிமங்கள், நிலக்கரி, ராணுவ தளவாட உற்பத்தி, யூனியன் பிரதேச மின் வினியோக கட்டமைப்பு, விமானப் போக்குவரத்து, விண்வெளி, அணுசக்தி, போக்குவரத்து வசதிகள் ஆகிய துறைகளில் இன்று அறிவிப்பு வெளியாக உள்ளது என்று தெரிவித்தார்.
அதில் ,ராணுவத் தளவாட உற்பத்தியில் தன்னிறைவை ஏற்படுத்தும் வகையில் ‘மேக் இன் இந்தியா’ திட்டம் செயல்படுத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பாதுகாப்பு உதிரிபாகங்கள் இனி உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும். பாதுகாப்புத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டு வரம்பு 49சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆயுத தொழிற்சாலை வாரியம் கார்ப்பரேட் மயமாக்கபடும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.