#BREAKING: மகாராஷ்டிரா – ஏப்ரல் 2 முதல் மாஸ்க் அணிய தேவையில்லை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளை மறுநாள் முதல் மாஸ்க் அணிய தேவையில்லை என அம்மாநில அரசு அறிவிப்பு.
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் அனைத்து விதமான கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி, முகக்கவசம் அணிவது கட்டாயம் என்பது உள்ளிட்ட அனைத்து விதமான கட்டுப்பாடுகளையும் விலக்கிக்கொள்வதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தோபே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 183 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், கட்டுப்பாடுகள் நீக்கப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அம்மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி 902 கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், நாட்டிலேயே முதல் மாநிலமாக மாஸ்க் அணிய தேவையில்லை என மகாராஷ்டிரா அறிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025