#BREAKING : மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு..!
உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி மக்களவையில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் காரணமாக மக்களவை மதியம் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றம் தொடங்குவதற்கு முன்பே உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலகக்கோரி நாடாளுமன்ற வளாகத்தில் ராகுல் காந்தி தலைமையில் காங். எம்பிக்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.