#BREAKING : எதிர்க்கட்சிகளின்எதிர்ப்புகளுக்கு மத்தியில் தேர்தல் சீர்திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றம்…!

Default Image

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில் தேர்தல் சீர்திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இந்த மசோதா வாக்காளர் அடையாள அட்டையில் ஆதார் எண்ணை இணைக்க வழிவகை செய்கிறது.

 இன்று இந்த மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே தேர்தல் சீர்திருத்த மசோதா மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் மசோதாவை தாக்கல். செய்தார் மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்