#BREAKING: மக்களவை நாள் முழுவதும் ஓத்திவைக்கப்பட்டது…!

செல்போன்கள் ஒட்டுக்கேட்பு சர்சையால் மக்களவை நாள் முழுவதும் ஓத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் அடுத்த மாதம் 13ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், செல்போன் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை கண்டித்து இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மக்களவை தொடங்கியதும் பெகாசாஸ் உளவு மென்பொருள் விவகாரத்தில் மத்திய அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நாள் முழுவதும் ஓத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையிலும் பிரச்சனை நீடித்ததால் நண்பகல் 12.30 மணி வரை ஓத்திவைக்கப்பட்டது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025