#BREAKING: வெளியானது புதிய மத்திய அமைச்சர்கள் பட்டியல்.!!

Default Image

பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவுள்ள நிலையில், புதிய அமைச்சரவையின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 2வது முறையாக பதவியேற்றதற்கு பிறகு முதல் முறையாக இன்று மாலை மத்திய அமைச்சரவை விரிவாக்கத்துடன் மாற்றம் செய்யப்படவுள்ளது. இதனையொட்டி மத்திய அமைச்சர்கள் ரமேஷ் பொக்ரியால், சந்தோஷ் கங்வார், தாவர்சந்த் கெலாட், தபஸ்ரீ சவுத்ரி, சதானந்தா கவுடா, ஹர்ஷவர்தன் உள்ளிட்ட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இந்த நிலையில், புதிதாக பதவியேற்கவுள்ள 43 புதிய மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட இருப்பதாக கூறப்பட்ட நிலையில், தற்போது 43 பேர் கொண்ட புதிய மத்திய அமைச்சர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சரவையில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகளுக்கு இடமளிக்கப்படுகிறது. 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் புதிய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.இதில் தமிழக பாஜக தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளார். 43 புதிய மத்திய அமைச்சர்களின் பதவியேற்பு விழாவானது இன்று மாலை 6 மணிக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ளது.

புதிதாக பதவியேற்க உள்ள 43மத்திய அமைச்சர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணத்தை செய்து வைக்கிறார் என்பது குறிப்பிடப்படுகிறது.

43 புதிய மத்திய அமைச்சர்கள்:

புதிய அமைச்சர்கள் – நாராயண் டட்டு ரானே, சர்பானந்தா சோனோவால், டாக்டர் வீரேந்திர குமார், ஜோதிராதித்யா எம் சிந்தியா, ராம்சந்திர பிரசாத் சிங், அஸ்வினி வைஷ்ணவ்ஸ்ர, பாஷு பதி குமார் பராஸ், கிரேன் ரிஜிஜு, ராஜ்குமார் சிங், ஹர்தீப் சிங் பூரி, மன்சுக் மாண்டவியா, பூபேந்தர் யாதவ், பர்ஷோட்டம் ரூபாலா, ஜி. கிஷன் ரெட்டி, அனுராக் சிங் தாக்கூர், பங்கஜ் சவுத்ரி, அனுப்ரியா சிங் படேல், டாக்டர் சத்ய பால் சிங் பாகேல், ராஜீவ் சந்திரசேகர் ஆகியோரும்,

சுஷ்னி ஷோபா கரண்ட்லேஜே, பானு பிரதாப் சிங் வர்மா, தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ், மீனகாஷி லேகி, அன்பூர்ணா தேவி, ஏ.நாராயணசாமி, கௌஷால் கிஷோர், அஜய் பட், பி எல் வர்மா, அஜய் குமார், சவுகான் தேவுசிங், பகவந்த் குபா, கபில் மோரேஸ்வர் பாட்டீல், சுஷ்ரி பிரதிமா பூமிக், டாக்டர் சுபாஸ் சர்க்கார், டாக்டர் பகவத் கிஷன்ராவ் காரத், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், டாக்டர் பாரதி பிரவீன் பவார், பிஷ்வேஸ்வர் டுடு, சாந்தனு தாக்கூர், டி ஆர்.முஞ்சபரா மகேந்திரபாய், ஜான் பார்லா, எல்.முருகன், நிசித் பிரமானிக் ஆகியோரும் புதிதாக பதவியேற்கின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்