#Breaking: மேகதாது அணையை கட்டியே தீருவோம் – கர்நாடகா பிடிவாதம்

மேகதாது அணையை காட்டியே தீருவோம் என கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, மேகதாதுவில் அணை கட்டுவதில் 100 சதவீதம் உறுதியாக உள்ளோம். மேகதாதுவில் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையையும் விதிக்கவில்லை என்றும் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய அரசு சட்டரீதியாக பரிசீலிக்கும். மேகதாது அணை கட்டுமான பணியை நிறுத்தும் பேச்சுக்கே இடமில்லை. பிரச்சனைகளை காவிரி தீர்ப்பாயம் தீர்த்து வைத்ததால் அணையை நிறுத்த எந்த காரணமும் இல்லை. எனவே, மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, மேகதாது அணைக்கு எதிராக தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் 3 முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அணையை காட்டியே தீருவோம் என கர்நாடகா பிடிவாதம் பிடித்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இன்று இந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு…வெப்பநிலை இப்படிதான் இருக்கும்! வானிலை மையம் தகவல்!
April 5, 2025
‘தமிழ்நாட்டில் கால் வை பார்க்கிறேன்’..எச்சரித்த வைகோ…பதிலடி கொடுத்த நிர்மலா சீதாராமன்!
April 5, 2025