#Breaking:சற்று நிம்மதி…மீண்டும் 7 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு;1 லட்சத்துக்கு கீழ் சரிந்த சிகிச்சை!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,915 பேர் கொரோனா தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இறப்பு எண்ணிக்கை 180 ஆக பதிவாகியுள்ளது. இதுவரையிலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,29,31,045 ஆக உள்ளது.
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 8,013 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 6,915 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 1000 குறைவு.கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,29,31,045 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 119 ஆக இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 180 ஆக குறைந்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,14,023 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 16,864 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை இந்தியாவில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,23,24,550 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை நேற்று 1,02,601 ஆக இருந்த நிலையில்,தற்போது ஆக 92,472 குறைந்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 1,77,70,25,914 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளது.கடந்த 24 மணி நேரத்தில் 18,22,513 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.