#Breaking:லக்கிம்பூர் வன்முறை சம்பவம் திட்டமிட்ட சதி – சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு தகவல்!
லக்கிம்பூர் விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது திட்டமிட்டு நடத்தப்பட்ட சதி என்று சிறப்பு புலனாய்வு விசாரணைக்குழு தகவல் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெர்ரி பகுதியில் கடந்த அக்டோபர் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். அதன்பின் நடைபெற்ற வன்முறை சம்பவத்தில் கார் ஓட்டுநர், 2 பாஜக தொண்டர்கள், ஒரு பத்திரிக்கையாளர் என மொத்தம் 8 பேர் உயிரிழந்தனர்.
இதனையடுத்து,இந்த வழக்கில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகனான ஆஷிஷ் மிஸ்ரா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து,இந்த விவகாரத்தில் நடைபெறும் விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதி ராஜேஷ்குமார் ஜெயின் என்பவரை உச்சநீதிமன்றம் நியமித்தது. மேலும் 3 மூத்த போலீஸ் அதிகாரிகளையும் சிறப்பு புலனாய்வு குழுவுடன் சேர்த்தது
இந்நிலையில்,லக்கிம்பூர் கெர்ரி விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தில் கார் நுழைந்தது மற்றும் வன்முறை சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதி என்றும்,மாறாக எதார்த்தமாக நடந்தவை அல்ல என்றும் இதனை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.மேலும்,மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் உட்பட கைது செய்யப்பட்ட 13 குற்றவாளிகள் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும் இக்குழு உச்சநீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளது.
Investigation team probing Lakhimpur Kheri violence says the incident was as per a “pre-planned conspiracy” which led to death of 5 people and left several injured
(file photo) pic.twitter.com/oAjYLQwF3V
— ANI UP (@ANINewsUP) December 14, 2021