டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் கெஜ்ரிவால் அரசு வெற்றி.
டெல்லி மாநில சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றது. தனது கட்சி எம்எல்ஏக்களுக்கு 800 கோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுவதாகவும், டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்கவே தொடர்ந்து பல இடையூறுகளை பாஜக செய்வதாகவும் அர்விந்த் கெஜ்ரிவால் சில நாட்களுக்கு முன்பு பகிரங்கமாக குற்றசாட்டியிருந்தார்.
இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் சிறப்பு கூட்டம் கூடியது. அப்போது மணீஷ் சிசோடியா பதவி விலக வேண்டும் என்று பதாகைகளை ஏந்திக்கொண்டு பாஜகவினர் கோஷங்களை எழுப்பி வந்தனர். இந்த சமயத்தில் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பை சட்டப்பேரவையில் நடத்துவதற்கு அர்விந்த் கெஜ்ரிவால் கோரியிருந்தார். அந்த நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் தற்போது அர்விந்த் கெஜ்ரிவால் அரசு வெற்றி பெற்றுள்ளது.
மொத்தமுள்ள 62 ஆம் ஆத்மி எம்எல்ஏக்களில் 58 பேர் வாக்கெடுப்பில் கலந்துகொண்டு கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்கள். 70 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டப்பேரவையில் ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு 62 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.
பாஜகவுக்கு 8 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கெஜ்ரிவால் தலைமையிலான அரசுக்கு வாக்களிப்பார்களா என்று பெரும் எதிர்பார்ப்பு இருந்த நிலையில், எம்எல்ஏக்களில் 58 பேர் ஆதரவாக வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…