#Breaking:சற்று முன்…உ.பி. 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!
உ.பி:6 ஆம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது;வாக்களித்தார் அம்மாநில முதல்வர் யோகி.
உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில்,இதுவரை 5 கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது.
இந்நிலையில்,உத்தரப்பிரதேச மாநில சட்டசபை தேர்தலுக்கான 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்போட்டியிடும் கோரக்பூர் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.
அதன்படி,இந்த தேர்தலானது 57 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது.இந்த தேர்தலில் 676 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில்,2.14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை பின்பற்றி இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே,உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 6வது கட்டமாக கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கன்யா நகர் க்ஷேத்ராதொடக்கப்பள்ளியில் வாக்களித்தார்.
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath casts his vote at Primary School Gorakhnath Kanya Nagar Kshetra, in Gorakhpur, for the 6th phase of #UttarPradeshElections pic.twitter.com/Eou6apv4p0
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) March 3, 2022
6 ஆம் கட்ட தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் 27% பேர் குற்ற வழக்குகளை எதிர்கொண்டிப்பவர்கள் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.