#BREAKING: பேரறிவாளன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

பேரறிவாளன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு.
பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம். தன்னை விடுவிக்கக்கோரி பேரறிவாளன் தொடர்ந்து வழக்கில் மத்திய, மாநில அரசுகளின் காரசார விவாதம் இன்று நடத்திய நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஆளுநர் சார்பில் மத்திய அரசு ஆஜராவது ஏன் உள்ளிட்ட அடுக்கடுக்கான கேள்விகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எழுப்பியிருந்தார்கள்.
இந்த வழக்கு விசாரணையின்போது, அமைச்சரவை முடிவை, குடியரசு தலைவருக்கு அனுப்பும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? கடந்த முறை 2 முடிவுகளை தேர்வு செய்ய கூறினோம், அதுதொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா? என்பது தொடர்பாக மத்திய அரசிடம் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. பேரறிவாளன் விவகாரத்தில் 2 3 ஆண்டுகளாக ஆளுநர் முடிவெடுக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தது. மாநில அரசின் முடிவுகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தது.
மேலும், மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை விவகாரங்கள் மத்திய அரசின் அதிகாரத்துக்கு கீழ் வருகிறது என மத்திய அரசு தரப்பு தெரிவித்திருந்தது. உச்ச நீதிமன்றம் கேள்விக்கு, மத்திய அரசிடம் சரியான தெளிவு இல்லை என்றும் கருணை விவகாரத்தில் மாநில அமைச்சரவையின் முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் தானே எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருந்தனர். 75 ஆண்டுகளாக இந்திய குற்றவியல் சட்ட வழக்குகளில் ஆளுநர்களின் மனிப்புகள் அனைத்தும் அரசமைப்புக்கு முரணானதா? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது.
அமைச்சரவை முடிவை ஏற்றுக்கொள்லாமல் ஆளுநர் அரசியல் சாசன பிழையை செய்திருக்கிறார் என்றும் நீதிபதிகக்ள் குறிப்பிட்டனர். இந்த நிலையில், பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கில், அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. பேரறிவாளன் விடுதலை வழக்கு விசாரணையின்போது உச்ச நீதிமன்றம், மத்திய அரசிடம் கேட்கப்பட்ட கேள்விகள் குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள இதனை க்ளிக் செய்யவும்.. #BREAKING: பேரறிவாளன் வழக்கு – அதிகாரம் யாருக்கு? மத்திய அரசுக்கு அடுக்கடுக்காக கேள்வி!
லேட்டஸ்ட் செய்திகள்
“விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு எனது கட்சியில்..,” சீமான் ‘சாஃப்ட்’ பதில்!
February 25, 2025
எனக்கு அன்னைக்கே தெரியும்..சிவகார்த்திகேயன் வளர்ச்சி குறித்து ஷாம் என்ன சொன்னார் தெரியுமா?
February 25, 2025
ரொம்ப மோசமான பார்ம்…இந்தியாவின் B டீமை கூட பாகிஸ்தான் தொட முடியாது..சுனில் கவாஸ்கர் பேச்சு!
February 25, 2025
இந்தி எது ஆங்கிலம் எது ? விமர்சனம் செய்த அண்ணாமலை!
February 25, 2025