#BREAKING: ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு ஒப்புதல் – மத்திய அரசு

Default Image

இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கியது மத்திய அரசு.

ஜான்சன் & ஜான்சன் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டு அங்கீகரிக்க கோரி மத்திய அரசிடம் நேற்று விண்ணப்பித்திருந்தது. ஜான்சன் & ஜான்சன் ஒரே ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் அதன் தடுப்பூசியை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில், இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கியது மத்திய அரசு. 4 தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்ட நிலையில், தற்போது 5வதாக ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் தயாரித்துள்ள ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே, கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் உள்ளிட்ட 5 தடுப்பூசிகளுக்கு அவசரகால அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி ஏற்கனவே, அமெரிக்காவில் பயன்பாட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்