#BREAKING: வட்டிக்கு வட்டி தள்ளுபடி.. உடனே அமல்படுத்த உத்தரவு..!

Published by
murugan

நாடு முழுவதும் கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால், பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டன. இதனை கருத்தில் கொண்டு மார்ச் முதல் ஆகஸ்ட் வரை 6 மாதங்களுக்கு கடன் தவணைகளை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், சில வங்கிகள் வட்டி வட்டி வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இந்நிலையில், வங்கிக் கடன்களுக்கு வட்டி வட்டி வசூலிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்களுக்கு எதிராக மத்திய அரசு கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பாத்திரம் தாக்கல் செய்தது.

அதில், கொரோனா பொதுமுடக்க காலத்தில் இரண்டு கோடி ரூபாய் வரை கடன் பெற்றவர்களின் வட்டிக்கு வட்டி வசூல் செய்யும் முறையை ரத்து செய்யப்படுவதாக தெரிவித்தது. இந்த குறிப்பிட்ட காலத்தில் அவர்கள் வட்டிக்கு வட்டி செலுத்தி இருந்தால் அதை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சில வங்கிகள் இந்த உத்தரவை அமல்படுத்த ஒரு மாத காலம் அவகாசம் வேண்டும் என கூறினர். அதற்க்கு நீதிபதிகள், தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருகிறது. எனவே எவ்வளவுக்கு எவ்வளவு  விரைவாக செய்யமுடியுமோ அதற்க்குள் செய்ய வேண்டும்.

வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவை அமல்படுத்த ஒரு மாதம் அவகாசம் கோருவது நியாயமில்லை, உங்களிடம் கொடுக்கப்பட்ட கூடுதல் பணத்தைதான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கப் போகிறீர்கள், இதனால், உங்களுக்கு சிரமம் இருக்காது. ரூ. 2 கோடி வரை கடன் பெற்றவர்களுக்கு 6 மாதத்திற்கான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யும் முடிவு விரைவில் அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியது.

மேலும், இந்த வழக்கு மீதான விசாரணை வருகின்ற நவம்பர் 02-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

Published by
murugan

Recent Posts

தடுமாறிய கார்..விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்திற்கு என்னாச்சு?

தடுமாறிய கார்..விபத்தில் சிக்கிய நடிகர் அஜித்திற்கு என்னாச்சு?

சென்னை : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…

1 hour ago

Live : உள்ளூர் அரசியல் நிகழ்வுகள் முதல்.., சர்வதேச செய்திகள் வரை…

சென்னை : அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைத்த காரணத்தால் SDPI கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சி பொதுச்செயலாளர்…

1 hour ago

விண்வெளியில் மற்றொரு வரலாறு! ராக்கெட்டில் கிளம்பும் இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா!

அமெரிக்கா : இந்திய விண்வெளி ஆய்வில் புதிய அத்தியாயத்தை எழுத உள்ளது. ஏனென்றால்,  சுபான்ஷு சுக்லாவின் சர்வதேச விண்வெளி நிலைய…

2 hours ago

பாஜக கூட்டணி., அதிமுகவில் முதல் விக்கெட் அவுட்! SDPI பரபரப்பு அறிவிப்பு!

சென்னை : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக அதிமுகவுடன் அண்மையில் பாஜக கூட்டணி அமைத்தது. பாஜக மூத்த தலைவரும், மத்திய…

2 hours ago

எலான் மஸ்க் உடன் பேசினேன்.., பிரதமர் மோடி பகிர்ந்த புதிய தகவல்!

டெல்லி : கடந்த பிப்ரவரி மாதம் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்க பயணத்தின் போது தொழிலதிபர் எலான் மஸ்க்கை பிரதமர் நரேந்திர மோடி…

3 hours ago

சென்னை மக்களுக்கு குளுகுளு செய்தி! முதன்முதலாக ‘ஏசி’ மின்சார ரயில் சேவை தொடக்கம்….

சென்னை : தமிழ்நாட்டில் முதல் முறையாக ஏசி பெட்டிகள் கொண்ட முதல் மின்சார ரயில் சேவை இன்று காலை 7…

4 hours ago