#Breaking:இந்தோனேசிய நிலநடுக்கம் – இந்தியாவுக்கு பாதிப்பில்லை!
இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு ஏதும் இல்லை என இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மௌமரே நகருக்கு அருகே 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் காரணமாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையத்தால் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,இந்தோனேசியாவில் ஏற்பட்ட 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கத்தால் இந்தியாவுக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை என இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு 9.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் காரணமாக மலேசியா, இலங்கை, இந்தியா, மாலத்தீவுகள் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்த 230,000 பேர் உயிரிழந்தனர். இந்தோனேசியாவில் சுமார் 170,000 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.