#BREAKING: இந்தியாவின் முதல் நாசி தடுப்பூசி – அனுமதி அளித்தது மத்திய அரசு!
மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்துக்கு மத்திய அரசு அனுமதி.
மூக்கு வழியே செலுத்தும் நாட்டின் முதல் கொரோனா தடுப்பு மருந்தை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு (DCGI) அனுமதி அளித்துள்ளது. ஊசிக்கு பதிலாக மூக்கு வழியே செலுத்தும் வகையில் நவீன கொரோனா தடுப்பு மருந்தை பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
பிபிவி 154 என்ற பெயர் கொண்ட தடுப்பு மருந்தை பயன்படுத்த இந்திய மருந்து தரக்கட்டுப்பாடு அமைப்பு ஒப்புதல் அளித்துள்ளது. மூக்கு வழியே செலுத்தும் கொரோனா தடுப்பு மருந்தை 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா அனுமதி வழங்கினார். கொரோனா தொற்றுக்கான இந்தியாவின் முதல் நாசி தடுப்பூசி இதுவாகும்.