நிதி சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதாக தகவல்.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசு சரிந்து, ரூ.78.13 ஆக குறைந்துள்ளது. நிதி சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் தொடர்ந்து வெளியேறி வருவதால் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. சமீப நாட்களாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், மேலும் 20 காசுகள் சரிந்து இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
மேலும் இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,456 புள்ளிகள் குறைந்து, 52,846 புள்ளிகள் வர்த்தகம் நிறைவு பெற்றது. இதுபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 427 புள்ளிகள் சரிந்து, 15,774 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவு பெற்றது. இதனிடையே, இன்று காலை வாரத்தின் முதல் வணிக நாளில் இந்திய பங்குசந்தைகள் கடும் வீழ்ச்சியில் காணப்பட்டது.
அப்போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,400 பபுள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சியடைந்து காணப்பட்டது. அதாவது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,422 புள்ளிகள் சரிந்து, 52,881 புள்ளிகளில் வத்தகமானது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 413 புள்ளிகள் குறைந்து, 15,788 புள்ளிகளில் வர்த்தகம் செய்யப்பட்டது. வாரத்தின் முதல் வர்த்தக நாளில் இந்திய பங்குசந்தைகளில் கடும் சரிவால் முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடப்படுகிறது.
மேலும், அமெரிக்க பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்ததன் எதிரொலியாக இந்திய பங்குசந்தைகளும் வீழ்ச்சியில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பணவீக்கம் உயர்ந்ததால் பங்குசந்தைகள் வீழ்ச்சி அடைந்ததற்கு காரணமாகும். இன்று காலை அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 36 காசு சரிந்து, புதிய உச்சமான ரூ.78.29-ஐ தொட்ட நிலையில், தற்போது மேலும் 20 காசுகள் சரிந்து கடும் சரிவை கண்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…