கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் புதுச்சேரியில் பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5,000 தாண்டிய நிலையில், புதுச்சேரி மாநிலத்தில் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கொரோனா பரவல் 15% எட்டியுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அதிகமாக கூடும் கடற்கரை, சந்தை, திரையரங்கு உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் எனவும் பேரிடர் மேலாண்மைத்துறை அதிகாரியும், புதுச்சேரி மாவட்ட ஆட்சியருமான வல்லவன் அறிவித்துள்ளார்.
திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இந்த சொர்க்கவாசல்…
சென்னை: விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது பெரும்…
சென்னை : மத்திய அரசு வசூல் செய்யும் ஜிஎஸ்டி வரித்தொகையானது, மாதந்தோறும் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அவ்வாறு இன்று டிசம்பர் மாதம்…
கொல்கத்தா: இந்த மாதம் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய வீரர் கே.எல்.ராகுல் பங்கேற்கமாட்டார் என கூறப்படுகிறது.…
வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான பரமபத வாசல் எனும் சொர்க்கவாசல் திறப்பு அனைத்து வைணவ ஆலயங்களிலும் கோலாகலமாக திறக்கப்பட்டது. சென்னை…
சென்னை : சமீபகாலமாக விளைநிலங்களில் கட்டு பன்றிகள் நுழைந்து சேதம் ஏற்படுத்தி வருவதால் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும் என…