#BREAKING: நீங்கள் நிறுத்தவில்லை என்றால், நாங்கள் நிறுத்துவோம் -சுப்ரீம் கோர்ட்
மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் 48-வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். வேளாண் சட்டங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க மத்திய அரசு தயாரா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்புள்ளது. மத்திய அரசு வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தினால் நாங்கள் விவசாயிகளுடன் பேச குழு அமைக்கிறோம்.
மத்திய அரசு சார்பில் என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன என்பது குறித்து விளக்குமாறு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி கேட்டுக்கொண்டுள்ளார். டெல்லி விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆக்கபூர்வமான முன்னெடுப்புகளை மத்திய அரசு எடுக்கவில்லை. வேளாண் சட்டங்கள் நல்லது என்று ஒருவர் கூட மனு வழக்கு தொடுக்கவில்லை. சிலர் தற்கொலை செய்கிறார்கள், வயதானோர், பெண்கள் போராடுகின்றனர், என்னதான் நடக்கிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஏன் வயதானவர்களையும், பெண்களையும் போராட்டத்தில் ஈடுபடுத்துகிறீர்கள் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. வேளாண் சட்டங்களை அமல்படுத்தியே தீருவோம் என மத்திய அரசு நினைப்பது ஏன் என்று தெரியவில்லை. விவசாய சட்டங்களை மத்திய அரசு நிறுத்தி வைக்க முடிவு எடுக்காவிடில், நீதிமன்றம் நிறுத்தி வைக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.