#Breaking:ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் வழக்கு ;தெலுங்கானாவுக்கு மாற்றிய உத்தரவு – உச்சநீதிமன்றம் ரத்து..!
ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் வழக்கை தெலுங்கானாவுக்கு மாற்றிய உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத் துறை ஐ.ஜி. முருகன் தனது பதவியில் இருந்தபோது,தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெண் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கடந்த 2018 ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார்.இதனையடுத்து,இந்தப் புகார் குறித்து விசாரிக்கக் கூடுதல் டி.ஜி.பி. சீமா அகர்வால் தலைமையில் விசாகா குழுவை அமைத்து தமிழக காவல்துறை உத்தரவிட்டிருந்தது.
இதுதொடர்பாக விசாரித்த விசாகா குழு, இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்குப் பரிந்துரை செய்தது.பின்னர்,இதுதொடர்பாக விசாரித்த விசாகா குழு, இந்த விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்தது.ஆனால்,சிபிசிஐடி இந்த வழக்கை முறையாக விசாரிக்கவில்லை என்று கூறி,வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண் காவல்துறை உயர் அதிகாரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ,இந்த வழக்கை தெலுங்கானா மாநிலத்திற்கு மாற்றி,இந்த பாலியல் புகார் மீதான விசாரணையை 6 மாதத்துக்குள் விசாரித்து முடித்து தங்களிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து ஐ.ஜி. முருகன் மற்றும் தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், தெலுங்கானா மாநிலத்தில் மாற்றிய சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது.
இந்நிலையில்,ஐ.ஜி. முருகன் மீதான பாலியல் புகார் வழக்கை தெலுங்கானா மாநிலத்துக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.மேலும்,ஐ.ஜி மீதான பாலியல் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்கலாம் என்ற அனுமதியையும் வழங்கியுள்ளது.