#BREAKING : +2 தேர்வு நடத்துவது என்பது நிச்சயம் முடியாத ஒன்று – மத்திய அரசு
சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியானதே என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் கான்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வில் நடைபெற்றது.
அப்போது, கொரோனா சூழலில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது என்பது நிச்சயம் முடியாத ஒன்று. மாணவர்களின் உயிர் என்பது விலைமதிப்பற்றது.இக்கட்டான சூழலில் மாணவர்களை தேர்வு எழுத சொல்லி நிர்பந்திக்க முடியாது.தேர்வு எழுதும் ஒரு மாணவருக்கு ஏதாவது ஒன்று ஆனால், அது சிக்கலை ஏற்படுத்திவிடும். சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது சரியானதே என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் அளித்துள்ளது.
இதனையடுத்து, மத்திய அரசின் விளக்கத்தை ஏற்று, சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்துக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.