#BREAKING: ஹத்ராஸ் வழக்கு நவம்பர் 2 ஆம் தேதி ஒத்திவைப்பு.!

Default Image

19 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஹத்ராஸ் வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் இன்று முதல் விசாரணை நடைபெற்று முடிந்தது.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தை சேர்ந்த 19 வயதான இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யபட்டு கடந்த மாதம் 29 ஆம் தேதி உயிரிழந்தார். இந்த இளம்பெண்ணின் உயிரிழப்பிற்கு பலர் தங்களது கண்டனங்களை தெரிவித்தனர்.

மேலும், இந்த சம்பவத்தில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில், ஹத்ராஸ் வழக்கு தொடர்பாக சிபிஐயை விசாரிக்க உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பரிந்துரை செய்தார். அதன்படி, ஹத்ராஸ் வழக்கு விசாரணையை சிபிஐ கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அலகாபாத் உயர்நீதிமன்ற அமர்வில் அந்த அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அந்த வகையில், நீதிமன்றம் இன்று முதல் விசாரணையை முடித்தது, அடுத்த விசாரணையை நவம்பர் 2 ஆம் தேதி விசாரிக்க முடிவு செய்துள்ளது.

இன்று நடைபெற்ற, விசாரணையில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர், கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் கே அவஸ்தி மற்றும் எஸ்பி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்