குஜராத் கலவரம் தொடர்பாக பொய்யான தகவலை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் தீஸ்தாவுக்கு ஜாமீன்.
சமூக செயற்பாட்டாளர் தீஸ்தாவுக்கு இடைக்கால பிணை வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2002 குஜராத் கோத்ரா கலவரம் தொடர்பாக பொய்யான தகவலை கொடுத்ததாக கைது செய்யப்பட்ட சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாதுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம். நிலுவையில் உள்ள விசாரணைக்கு ஆர்வலர் தீஸ்தா முழு ஒத்துழைப்பை வழங்குவார் என்று கூறிய உச்ச நீதிமன்றம், அவரது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டது.
இதனிடையே, 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து மதகலவரம் வெடித்தது. இதில் பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதேநேரத்தில் குஜராத் வன்முறை வழக்குகளில் மோடியை தொடர்புபடுத்தி சிக்க வைக்க சதித் திட்டம் தீட்டியதாக தீஸ்தா செதல்வாத்தை அதிரடியாக சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்தது.
தீஸ்தா செதல்வாவுடன் முன்னாள் டிஜிபி ஶ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோரும் கடந்த ஜூன் 25-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையானது. இவ்வழக்குகளில் தங்களுக்கு ஜாமீன் கோரி தீஸ்தா, ஶ்ரீகுமார் தாக்கல் செய்த மனுவை அகமதாபாத் நீதிமன்றம் நிராகரித்ததை தொடர்ந்து தீஸ்தா செதல்வாத் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்த நிலையில், தீஸ்தா செதல்வாத் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை : பாமக நிறுவனர் டாக்டர் ராம்தாஸ் பேத்தியும், அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மகளுமான சங்கமித்ரா அன்புமணி ,…
சென்னை: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா இணைந்துள்ள படம் மீது பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை…
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…