#BREAKING: குஜராத் கலவரம்.. பிரதமருக்கு எதிரான மனு தள்ளுபடி – உச்சநீதிமன்றம்

Default Image

குஜராத் கலவரம் விவகாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிரான மனுவை  தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்.

குஜராத் கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். 2002-ஆம் ஆண்டு குஜராத் கலவரம் விவகாரத்தில் பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு எதிரான மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பழைய வழக்காக இருந்தாலும், குஜராத் கலவர வழக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காக கருதப்படுகிறது. பிரதமர் மோடி மீது குற்றச்சாட்டப்பட்டு இருந்ததே இதற்கு காரணம். அந்த சமயத்தில் குஜராத் முதலமைச்சராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி.

குஜராத் கலவர வழக்கில் பிரதமர் மோடி குற்றமற்றவர் என எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வு) அறிவித்ததை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. மறைந்த முன்னாள் காங்கிரஸ் எம்பி எசன் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் பிரதமர் மோடி மீதான குற்றசாட்டுகள் ஆதாரமற்றவை என்பதால் உச்சநீதிமன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் பிரதமருக்கு எதிராக தீர்ப்பு வந்திருந்தால், பல்வேறு அரசியல் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பிருந்த நிலையில், மனு தள்ளுபடி செய்யபட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்