ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய ,மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.மேலும்,இந்தியா கூட்டாட்சி தத்துவ நாடு என்பதால் ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைக்கு நம்பத் தகுந்த மதிப்பு மட்டுமே உண்டு எனவும், ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மாநில அரசுகளை கட்டுப்படுத்தும் என உத்தரவிட்டால் நாட்டின் கூட்டாட்சி அமைப்பு பாதிக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நிறுவனம் ஜிஎஸ்டி ரீதியான சில குழப்பங்களுக்காக அம்மாநில உயர்நீதிமன்றத்தை நாடிய நிலையில், ஜிஎஸ்டி கவுன்சிலின் பணி என்பது முக்கியமான பரிந்துரைகளை வழங்குவதே தவிர மத்திய மாநில அரசுகளை கட்டுப்படுத்துவதல்ல என்று தீர்ப்பு வழங்கியது.
இதற்கு எதிராக ஜிஎஸ்டி கவுன்சில் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில்,இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில்,ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மத்திய ,மாநில அரசுகளை கட்டுப்படுத்தாது என்ற தீர்ப்பினை உச்சநீதிமன்ற நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு வழங்கியுள்ளது.மேலும்,ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைகள் மற்றும் அறிவுரைகள்தான் வழங்க வேண்டுமே தவிர இதை கட்டாயம் செய்யுங்கள் என்று எந்தவொரு அரசுகளுக்கும் உத்தரவிடமுடியாது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும்,ஜிஎஸ்டி தொடர்பான விவகாரத்தில் சட்டங்களை இயற்ற மத்திய, மாநில அரசுகளுக்கு சட்டப்பிரிவு 246 ஏ-வின்படி சம உரிமை உண்டு எனவும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…
சென்னை : ஆர்.ஜே.பாலாஜியின் சொர்கவாசல் திரைப்படம் வெளியாக இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், படத்தின் முதல் டிரெய்லரை படக்குழுவினர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில்…
சென்னை : நேற்று (22-11-2024) ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில்…
சென்னை : திருச்செந்தூர் முருகன் கோயில் யானை தெய்வானை , கடந்த நவம்பர் 18ஆம் தேதியன்று, பாகன் உதயகுமார் மற்றும்…