#BREAKING: ஜி.எஸ்.டி குழுவை அமைத்த மத்திய அரசு..!
கொரனோ சிகிச்சைக்கான பொருள்களுக்கு வரி சலுகை அளிப்பது தொடர்பாக ஆராய மத்திய நிதி அமைச்சகம் குழு அமைத்தது.
43-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நேற்றைய காணொளி மூலம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டார். இந்த கூட்டத்தில் பல மாநிலங்களைச் சேர்ந்த நிதி அமைச்சர் கொரோனா பொருட்களில் விலைக்கு முழுமையாக ஜிஎஸ்டி ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
கொரோனா தடுப்பு ஊசிகள் மருந்துகள் மற்றும் கொரோனா சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் கருவிகளுக்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிப்பது அல்லது சலுகை அளிப்பது தொடர்பாக 8 பேர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், கொரனோ சிகிச்சைக்கான பொருள்களுக்கு வரி விலக்கு அல்லது வரி குறைப்பு குறித்து ஆராய 8 மாநிலங்களில் பிரதிநிதிகள் கொண்ட குழுவை மத்திய அரசு நியமித்துள்ளது
மேகலாயா முதல்வர் கொன்ராட் சர்மா தலைமையில் எட்டு மாநிலங்களில் பிரதிநிதிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சகம் அமைத்துள்ள குழுவில் தெலுங்கானா, கேரளா, உ.பி. ஒடிசா மாநில நிதி அமைச்சர்கள் மற்றும் குஜராத், மகாராஷ்டிரா மாநில முதல்வர்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
தடுப்பூசி, ஆக்ஸிஜன், வெண்டிலேட்டர், சனிடைசர், பிபிஇ உடை, ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் போன்ற பொருட்களுக்கு ஜிஎஸ்டி-லிருந்து விலக்கு கிடைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது.