கோவா மாநிலத்தில் உள்ள 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி மாதம் 14ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. அங்கு பாஜக ஆட்சி நடைபெறும் நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, கோவா பார்வேர்டு கட்சியுடன் இணைந்து போட்டியிட்டுள்ளது. இதில் காங்கிஸ் 37 இடங்களிலும், கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் போட்டியிட்டுள்ளது. இதுபோன்று, ஆம் ஆத்மியும் தனித்து 39 இடங்களிலும், திரிணாமூல் காங்கிரஸ், மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி ஆகியவை கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளன.
40 தொகுதிகள் கொண்ட கோவா சட்டசபையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க 21 இடங்கள் தேவை. கடந்த 2017-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும் வெற்றி பெற்றன. இருப்பினும், சுயேச்சை எம்எல்ஏக்கள், சிறிய கட்சிகளின் ஆதரவுடன் மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்றது. இதனால் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்றாலும் சட்டசபையில் பாஜக தனது பலத்தை நிரூபித்து ஆட்சியில் அமர்ந்தது.
கோவாவில் மனோகர் பாரிக்கர் மறைவையடுத்து பிரமோத் சாவந்த் முதல்வராக பொறுப்பேற்றிருந்தார். இந்த நிலையில், கோவா சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தற்போதைய நிலவரப்படி, காங்கிரஸ் 15, ஆளும் பாஜக 13, மகாராஷ்டிராவாடி கோமந்தக் கட்சி 6, சுயேட்சை 2, கோவா பார்வேர்டு கட்சி 1, ஆம் ஆத்மி கட்சி 1 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.
மேலும், கோவா மாநிலம் சாங்குலியம் தொகுதியில் போட்டியிடும் முதலமைச்சர் பிரமோத் சாவத் பின்னடைவை சந்தித்துள்ளார். இதுபோன்று பனாஜி தொகுதியில் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பலை பின்னுக்கு தள்ளி பாஜக வேட்பாளர் முன்னிலை பெற்று வருகிறார். எனவே, கோவா மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…