ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உத்திரபிரதேசம் வாரணாசியில் உலகப் புகழ்பெற்ற விஸ்வநாதர் கோவில் அமைந்துள்ளது. அதனை ஒட்டி உள்ள ஞானவாபி மசூதியின் வெளிப்புற சுவரில் உள்ள இந்து கடவுள் சிருங்கார கவுரி சிலையை தினமும் வழிபடுவதற்கு அனுமதி கோரி வாரணாசி நீதிமன்றத்தில் இந்து பெண்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த நிலையில், மசூதி வளாகத்திற்குள் கள ஆய்வு செய்யவும் அதை வீடியோவாக பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மசூதி வளாகத்துக்குள் கள ஆய்வு செய்தபோது சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, மசூதி நிர்வாகம் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளித்த வாரணாசி நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஞானவாபி மசூதியை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு, ஆய்வு விவரங்களை கசிய விடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கை வாரணாசி நீதிமன்றமே விசாரிக்கும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை : கடந்த அக்.31-ம் தேதி தீபாவளியை முன்னிட்டு 'அமரன்' திரைப்படம் வெளியாகி உலகம் முழுவதும் நல்ல ஒரு வரவேற்பைப்…
கோவை : தமிழக அரசின் சார்பாக நிறைவேற்றப் பட்டு வரும் பல நலத்திட்டப் பணிகள் சரியாக மக்களைச் சென்றடைகிறதா என்பதை…
வாஷிங்க்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவ.-5) மாலை (இந்திய நேரப்படி) நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் போட்டியிடும்…
டெல்லி : கனடாவில் உள்ள டொரன்டோ மாகாணத்திற்குட்பட்ட பிராம்ப்டன் எனும் பகுதியில் உள்ள ஹிந்து கோயில் மீது காலிஸ்தான் பயங்கரவாத…
சென்னை : தமிழகம் முழுவதும் மக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விரும்புவார்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என…
அமெரிக்கா : நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்க தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உலக நாடுகள்…