#BREAKING: பொதுத்தேர்தல் – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு.!

Default Image

கொரோனா காலத்தில் பொதுத்தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தலைமைத் தேர்தல் ஆணையம்.

  • தேர்தல் தொடர்பான பணிகள் போது ஒவ்வொருவரும் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும்.
  • தேர்தல் பணிகள் நடைபெறும் இடங்களில் வெப்ப பரிசோதனை கருவிகள் வைத்திருக்க வேண்டும். கிருமி நாசினி, சோப்பு, சானிடைசர் போன்ற பொருட்களையும் வைத்திருக்க வேண்டும்.
  • தேர்தல் தொடர்பான வேலைகளில் ஈடுபடும் அனைவருக்கும் முகக்கவசம் கட்டாயம். தெர்மல் ஸ்கேனர் சோதனை நடத்தப்படும். கைகளை கழுவ சானிடைசர், சோப்பு வைக்கப்படும்.
  • மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தூய்மைப்படுத்திய பிறகே பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். தேர்தல் பரப்புரையின் போது தனிமனித இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.
  • கொரோனா கால முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய, மாநில, மாவட்ட மற்றும் சட்டமன்ற தொகுதி ரீதியாக கண்காணிக்க அதிகாரி நியமிக்கப்படுவர்.
  • அத்தியாவசிய பணிகளில் உள்ள பணியாளர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள்தபால் மூலம் வாக்களிக்கவும் அனுமதி.
  • வாக்கு சேகரிப்பு, பிரசாரத்தின்போது சமூக இடைவெளி கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கொரோனா பாதித்த நோயாளிகள் தபால் மூலம் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • அரசு முகாம்கள் மற்றும் வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்களும் தபால் மூலம் வாக்களிக்கலாம்.
  • நவம்பர் மாதத்தில் பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற வேண்டியுள்ள நிலையில், தற்போது வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy