அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்று அரியானா அரசு அறிவிப்பு.
ரக்ஷா பந்தன் பண்டிகை வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, வடமாநிலத்தில் பெண்களுக்கு 48 மணிநேர இலவச பேருந்து பயணத்தை பல்வேறு மாநிலங்கள் அறிவித்து வருகிறது.இந்த நிலையில், ரக்ஷா பந்தனை முன்னிட்டு ஆகஸ்ட் 10 ஆம் தேதி நண்பகல் 12 மணி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி நண்பகல் 12 மணி வரை அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம் என்று ஹரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
ரக்ஷா பந்தன் விழாவையும், நாட்டின் 75வது சுதந்திர தினத்தையும் ஒருங்கிணைத்து கொண்டாடும் விதமாக இந்த முன்னெடுப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, ராஜஸ்தான் மாநிலத்தில், ரக்ஷா பந்தன் அன்று பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்பின், உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பெண்களுக்கு இலவச பேருந்து பயணத்தை அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…