#BREAKING: இவைகளை பார்வையிட இலவச அனுமதி – மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
நினைவு சின்னங்கள், முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி என மத்திய அரசு அறிவிப்பு.
நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தளங்களை பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 5-15ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி என்றும் கூறியுள்ளது.
அருங்காட்சியங்கள், தொல்லியல் தளங்கள் உள்ளிட்டவற்றையும் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என மத்திய கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது. 75-வது சுதந்திர தினத்தையொட்டி கொண்டாட்டங்கள் ஏற்கனவே தொடங்கி உள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், அருங்காட்சியங்கள், நினைவு சின்னங்களை இலவசமாக மக்கள் பார்வையிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.