#BREAKING: பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்
நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
நரிக்குறவர், குருவிக்காரர் என அழைக்கப்படும் பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் விடுப்பட்டிருந்த சமுதாயங்களை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் தெரிவித்துள்ளது.
முன்னதாக நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட பிரிவினரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதற்கு தற்போது மத்திய அமைச்சரவை ஒப்புதலை வழங்கியுள்ளது. நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்து வந்த கோரிக்கைகளை நிறைவேற்ற, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பழங்குடியினருக்கு வழங்கப்படும் சலுகைகள் அனைத்தும் நரிக்குறவர், குருவிக்காரர் பிரிவினருக்கும் கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.