#BREAKING: முன்னாள் ஆந்திர அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.!
முன்னாள் ஆந்திர அமைச்சர் Manikyala Rao கொரோனாவால்உயிரிழப்பு .
பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான “Manikyala Rao” கொரோனாவால் இன்று காலமானார்.
இவர் கடந்த மாதம் கொரோனா சோதனை செய்த பின் கொரோனா இருப்பது உறுதியானது , ஆரம்பத்தில் எலுருவில் உள்ள கொரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
59 வயதான அவர் பின்னர் சுவாசிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் ஒரு வாரத்திற்கு முன்பு விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் மற்றும் கடந்த சில நாட்களாக வென்டிலேட்டரில் இருந்தார். பின் விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
முன்னாள் அமைச்சர் மறைவு குறித்து முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி வருத்தம் தெரிவித்ததோடு, மறைந்த தலைவரின் இறுதி சடங்குகள் முழு மாநில மரியாதைகளுடன் செய்யப்பட வேண்டும் என்று மேற்கு கோதாவரி மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தினார்.