#BREAKING: ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறப்பு – முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கர்நாடகாவில் ஆகஸ்ட் 23ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவிப்பு.
கர்நாடகாவில் 9,10,11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 23ம் தேதி முதல் பள்ளிகளில் வகுப்புகள் துவக்கப்படும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் இன்று நடைபெற்ற அரசு அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடனான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் இரவு முழுவதும் ஊரடங்கு நேரத்தை மாநிலம் முழுவதும் நீட்டிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி, இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு இருந்த நிலையில், தற்போது நேரத்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், மகாராஷ்டிரா மற்றும் கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்ட்டுள்ளது. இதற்கு முன் ஹிமாச்சலப் பிரதேசத்தில் முதல்கட்டமாக 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.