#breaking : பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு – 4 பேர் பலி..!
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழப்பு.
பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து, அதிவிரைவு படை உஷார்படுத்தப்பட்டு ராணுவ முகாமில் அதிதீவிர சோதனை நடைபெற்று வருகிறது. அதிகாலை நடந்த சம்பவத்தை எடுத்து ராணுவ முகாமை சுற்றியுள்ள பகுதிகள் மூடப்பட்டு தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவமானது தீவிரவாத செயலா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.